• A. Kosakulam, Madurai

  • +91-9442283612, +91-8300724272

  • ceoaschools@gmail.com

நீள்கதைப் பாடத்திட்டம்

நீள்கதைப் பாடத்திட்டம்

தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் நமது தாய்மொழியாம் தமிழில் பிழையின்றி எழுதவோ பேசுவதோ கடினமாக உள்ளதாக உணர்கின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தாய்மொழி தமிழில் அவர்களின் வாசிப்பு மற்றும் படிப்பு திறன்களை மேம்படுத்த, எங்களது சி...ஏ பள்ளிகளில் நீள்கதை பாடத்திட்டம் என்ற புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் எங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியதிலிருந்து, எங்கள் மாணவ செல்வங்கள் பெற்ற நன்மைகள்:

  • குழந்தைகளின் உணர்வுகளுடன் கலந்த இயல்பான கற்றல் நடக்கிறது.

  • இதன் ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பல கேள்விகளும் எதிர்பாராத பதில்களும் செயல்பாடுகளும் இருக்கிறது.

  • இதனால் மாணவர்கள் ஈடுபாட்டுடன் தானே முன் வந்து தன் பதில்களையும் கருத்துக்களையும் தன் அனுபவங்களையும் கூறுகின்றனர்.

  • தான் கூறிய பதில் கற்றல் அட்டையில் உள்ளதா? சரியான பதில்தானா?” எனத் தேடுவது இதற்கு எடுத்துக்காட்டு.

  • சரியான பதிலைக் கண்டறிய எப்படியும் வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஒரு சொல் படிக்கும் போது பல சொற்களைத் தேடிப் படிக்கின்றனர். தாங்கள் படிக்கிறோம் என்று தெரியாமல் தேடுவதன் மூலமாக அவர்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர்.

  • அட்டை வாசிப்பின் மூலம் பெற்றோர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தி இருக்கிறது.

  • இது வாசிப்புத் திறன் மேம்பாட்டைக் காட்டுகிறது.

  • மாணவர்கள் தான் கூற நினைக்கும் கருத்தை பேச்சு வழக்கைக் குறைத்து நல்லதமிழில் பேசுகின்றனர்.

  • இது மொழித்திறன் மேம்பாட்டைக் காட்டுகிறது.

  • தனக்குத் தேவை ஏற்படும் போதும் தனக்குப் பிடித்தவற்றை எழுதும் போதும் அவர்களின் எழுதும் ஆர்வம் அதிகரிக்கிறது.

  • மெல்லக் கற்கும் மாண்வர்களும் தாங்களே முன் வந்து செயல்பாடுகளில் ஈடுபடுவது அவர்கள் மெதுவாக முன்னேற்றம் அடைவதையும், நன்கு படிக்கும் மாணவர்கள் ஆர்வத்தினால் வேகமாக வாசிப்பதையும் காண்முடிகிறது.

  • இப்பாடத்திட்டம் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.